இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி அபாராமாக விளையாடியது.
இன்று முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணியின் 05 விக்கெட்டுகளை இலங்கை அணியால் வீழ்த்த முடிந்தது. தற்போது பாகிஸ்தான் அணி 07 விக்கெட்டுகளை இழந்து 91 புள்ளிகளை பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
இப்போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி பெற்ற ஓட்ட எண்ணிக்கை 222 ஆகும்.
இலங்கை அணியின் அதிகபட்ச ஓட்டமாக தினேஷ் சந்திமால் 76 ஓட்டங்களைப் பெற்றார். அவரது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை விளையாடியது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 24 ஓட்டங்களை எடுத்துள்ளது.