எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 84 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

Date:

பத்தரமுல்லை பகுதியிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பொல்தூவ சந்தி உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று(13) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது காயமடைந்த 84 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 05 பெண்களும்,  இராணுவ சிப்பாய் ஒருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மற்றும் இரு ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.

நேற்றிரவு(13) வரையில் பொல்தூவ சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இளைஞர்களை கலைப்பதற்காக பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, பிரதமரை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி நேற்று(13) கொழும்பு – ஃபிளவர் வீதியிலுள்ள பிரதமரின் செயலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 40 பேர் வரை காயமடைந்தனர்.

இதனிடையே, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகியன தொடர்ந்தும் பொதுமக்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தியே கடந்த 9 ஆம் திகதி குறித்த வளாகங்களை மக்கள் கைப்பற்றினர்.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...