எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவை பாதிப்பு!

Date:

இலவச அம்பியூலன்ஸ் சேவையான “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையானது, நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அதேநேரம், குறிப்பிட்ட 13-20 நிமிடங்களுக்குள் இந்த சேவை அவசரநிலைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் அதனை நிவர்த்தி செய்வது தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது எனவும் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

“1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ்கள் வாகன விபத்துக்கள், அவசர சிகிச்சை மற்றும் பெரிய சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...