எரிபொருள் விநியோகம் தொடர்பாக கலந்துரையாட இரண்டு ரஷ்ய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை!

Date:

(file Photo)
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இருவரும் பஹரேன் முதல் கல்ஃப் எயர் விமான சேவை ஜீ.எப்.- 144ரக விமானத்தில்  இன்று காலை 9.00 மணியளவில்  வந்தடைந்ததாக சிங்கள ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான சர்வதேச நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், இந்த பிரதிநிதிகள் பஹ்ரைன் ஊடாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தனர்.

இந்த இரு அதிகாரிகளை வரவேற்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் அறைக்கு வந்திருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ச, தொலைபேசி உரையாடலில், எரிபொருள் இறக்குமதியை எளிதாக்குவதற்கான கடன் உதவியை ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் தனிப்பட்ட முறையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...