யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை கடற்படையினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அதற்கமைய தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா செல்லும் வழியில் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன.
கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெருமவின் மேற்பார்வையில் இந்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவு வாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை ஊழியர்கள் இணைந்து தேவையான மருத்துவ வசதிகள், உயிர்காக்கும் சேவைகள் மற்றும் பிற வசதிகளை வழங்குகின்றனர்.