கம்பஹா நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘பஸ் பொட்டா’ உட்பட நால்வர் காயம்!

Date:

கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலக கோஷ்டி உறுப்பிரான சமன் ரோஹித பெரேரா என அழைக்கப்படும் ‘பஸ் பொட்டா’ உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வேகன் ஆர் (வாகன மாடல்) ஒன்றில் வந்து ‘பஸ் பொட்டா’ வை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்று இலங்கை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், நீதிமன்ற விசாரணையில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ‘பஸ் பொட்டா’ மற்றும் பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதெவேளை ‘பஸ் பொட்டா’ ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...