கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

Date:

கல்முனை மாநகரில் சமையல் எரிவாயு விநியோகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதனால் முறைகேடுகள் இடம்பெறுவதுடன் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு அவர்களின் ஆதரவாளர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கி வருகின்றனர். இதனால் தேவையுடைய மக்களாகிய எங்களுக்கு கிடைப்பதில் இடர்பாடுகள் இருக்கிறது என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதேச செயலகத்தையும் தாண்டி கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பலர் தலையிட்டு சமையல் எரிபொருளுக்கான டோக்கன்களை வழங்கி அவர்களுக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்கின்றனர்.

இந்த வாய்ப்பானது அவர்கள் கட்சி சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. அதிலும் சிலர் தனது நெருங்கிய குடும்பத்தினர், தீவிர ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி பங்கிடுவதனால் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலாளர் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரியாக செயற்பட்டு தேவையுடைய மக்களுக்கு கிராம நிலைதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர்களை பயன்படுத்தி ஒழுங்கான முறையில் சகலருக்கும் கிடைக்கும் வண்ணம் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்க ஆவண செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

 

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...