குண்டு தாக்குதல் தொடர்பான கடிதம்: பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

Date:

குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய இம்மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் கறுப்பு ஜூலைரய முன்னிட்டு நடத்தப்படக் கூடிய பயங்கரவாதத் தாக்குதலின் வெளிப்பாடு, புலனாய்வு வட்டாரங்கள் மூலம் கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்பட்டது.

மேலும், இவை சரிபார்க்கப்படாத புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ‘கறுப்பு ஜூலை’யைத் தூண்டும் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்வதற்குத் தொடர்புபடுத்தும் எந்த அடிப்படைத் தகவலும் இல்லை.

மேலும், இவ்வாறான தாக்குதல் பயங்கரவாத குழுக்களால் மேற்கொள்ளப்படலாம் எனவும், அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும், ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்கும் வன்முறையைத் தூண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதால், பெறப்பட்ட உளவுத்துறையின் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் அதே வேளையில் உயர்தர பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், தமது அன்றாடப் பணிகளைத் தொடருமாறும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி. மீ. இற்கும் அதிக மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...