கோட்டா இப்போது எங்கே இருக்கின்றார் தகவல் வெளியானது!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் சிங்கப்பூர் செல்லவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இன்னமும் மாலைதீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

பாதுகாப்பாக செல்லும் ஏற்பாடுகள் தாமதமடைந்ததால், சிங்கப்பூர் செல்லும் SQ437 என்ற விமானத்தை அவர் தவறவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மாலைதீவு அதிகாரிகள் இமிக்ரேஷனுக்காக இவரின் அறைக்கு செல்ல மறுத்துள்ளதால், அவர் மக்களோடு மக்களாக லைனில் சிங்கப்பூர் இமிக்ரேஷனுக்கு நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என இப்போது தனி ஜெட் விமானமொன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...