ஜனாதிபதியினால் மூவரடங்கிய குழு நியமனம்!

Date:

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூவரடங்கிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர் ஒருவர், ஜப்பானின் தயிஸே நிறுவனத்திடம் கையூட்டல் கோரியதாக, சமூக வலைத்தளங்கள் உட்பட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்றில் குறிப்பிடப்பட்ட விடயத்தை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியதுடன், அது குறித்து விசாரணை நடத்துமாறும், ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

இதற்கமைய, நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவிடம், இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...