ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்ட 17.8 மில்லியன் ரூபா பணத்தை ஜூலை 9 ஆம் திகதி ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதவான் உத்தரவு பிறப்பித்த போது, மூன்று வாரங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொலிஸாரிடம் பணம் கையளிக்கப்பட்ட போதிலும் நீதிமன்றில் அறிக்கையோ பணமோ சமர்ப்பிக்கப்படவில்லை என நீதவான் திலின கமகே தெரிவித்தார்.
எனவே, அறிக்கை மற்றும் பணம் இரண்டையும் ஒப்படைக்குமாறு கோட்டை பொலிஸாருக்கு கமகே உத்தரவிட்டார்.