ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் குழுக் கூட்டம்: 8 வாரங்களின் பின்னர் மஹிந்த பங்கேற்பு!

Date:

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுகின்றது.

அதேவேளை இந்தக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்பது இதுவே முதல் முறை.

அவர் ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் அந்த செய்திகள் பொய்யானது எனவும் சமூக ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும், சில சமூக வலைதளங்களில் அவர் உயிர் இழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்ச கடந்த மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...