ஜனாதிபதி மாளிகையில் திருடப்பட்ட பொருட்களை விற்க முயன்ற மூன்று பேர் கைது!

Date:

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இருந்து திருடப்பட்ட பழங்காலத்து பொருட்கள் சிலவற்றை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போது, சந்தேக நபர்கள் ஜன்னல் திரைகளை தொங்கவிடுவதற்காக சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த 40 தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை பாதங்களை திருடிச் சென்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வசிக்கும் 28, 34 மற்றும் 37 வயதுடைய போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு  குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...