ஜூலை 25ம் திகதி விசேடடெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்: அசேல குணவர்தன!

Date:

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 43,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகளளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதத்தில் மாத்திரம் 8,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வுகளின்படி அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்கள் ஆகியவை டெங்கு பெருக்கத்திற்கு அதிக வாய்ப்புள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான அனைத்து காரணிகளையும் கருத்திற்க் கொண்டு, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 25ஆம் திகதி திங்கட்கிழமை விசேட டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் டெங்கு பரவும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கவும், டெங்கு ஒழிப்புக்கு பொறுப்பான அதிகாரியின் கீழ் குழுவை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...