தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்?

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள்  ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.

தம்மிக்க பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவால் காலியான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பின்னர் அவர் ஜூன் 24 அன்று முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சராக பதவியேற்றார். மற்றும் சில நாட்களுக்குப் பிறகு ஜூலை 10 ஆம்  திகதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...