அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இனி ஒவ்வொரு வாரமும் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் சரியான நேரத்திற்கு திறக்கப்படும்.
அதேநேரம் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்களுக்கு ஆன்லைனில் கற்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தென் மாகாண சபையின் ஆளுகைக்குட்பட்ட பாடசாலைகள் வாரத்தின் ஐந்து நாட்களும் திறக்கப்படும் என தென் மாகாண சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவனை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.