நாளை விசேட டெங்கு தடுப்பு தினமாக பிரகடனம்!

Date:

நாளை (ஜூலை 25) விசேட டெங்கு தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 43,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த மாதத்தில் மாத்திரம் 8,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதனையடுத்து, இந்த விசேட டெங்கு தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அன்றைய தினம் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஒரு மணிநேரம் தமது வளாகங்களை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் பொறுப்பான அதிகாரியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டு அதனைக் கண்காணித்து உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆதரவைப் பெற வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...