கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர்.
பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி இன்று மாலை 5.00 மணியளவில் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு முன்பாக போராட்டக்காரர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
சிலர் காயமடைந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.