பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம்: பீரிஸ்

Date:

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர வெளி வேட்பாளரை அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருப்பதால், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வெற்றி பெறுவது சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும ஏற்கனவே அறிவித்துள்ளதாக தெரிவித்த  பீரிஸ், அவர் மிகவும் பொருத்தமான வேட்பாளர் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சி என்ற ரீதியில் வேறு எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கும் முடிவை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...