முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படாது: கல்வி அமைச்சு அறிவிப்பு!

Date:

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது.

அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி முதல் அது தொடர்பான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வாராந்தம் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 தினங்களில் மாத்திரம் பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நடத்தப்படாத புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன்...

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்து வரும் பஹன மீடியா- 7வது ஆண்டை கொண்டாடுகிறது.

மூத்த ஊடகவியலாளர் எம்.எஸ். அமீர் ஹூசைன் இலங்கை பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இந்த...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...