இந்த வாரம் மூன்று எரிபொருள் கப்பல்கள் கொழும்புக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாளை (12ஆம் திகதி) முதல் 15ஆம் திகதி வரையில் டீசல் கப்பலும், இம்மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் கச்சா எண்ணெய்க் கப்பலும் வரவுள்ளது.
மேலும் இம்மாதம் 15ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்கும் இடையில் கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று வர உள்ளதாகவும், கப்பல் கொழும்புக்கு வந்ததன் பின்னர் பணத்தை செலுத்துமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையில் வரவிருக்கும் பெற்றோல் கப்பலுக்கான எஞ்சிய பணத்தை நாளை (12ஆம் திகதி) செலுத்துமாறும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.