ரஞ்சனுக்கு முழுமையான விடுதலையை கொடுங்கள்: எதிர்க்கட்சித் தலைவர்

Date:

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை, அந்த நாளுக்காக காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றார்.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீண்ட நேரம் கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டார்.

மேலும், பரோபகார அரசியல்வாதியாகவும், கலைஞராகவும் தொடர்ந்து பிரபலமடைந்து வரும் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் சுதந்திரக் குடிமகனாக சமூகத்திற்கு வந்து சமூக நீதிக்காக ஆற்றலுடன் செயற்படுவதே தமது ஒரே நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...