தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஓரளவுக்கு மக்களால் நிரம்பி பரபரப்பாக இருந்த போதிலும் இன்று பொருளாதார மத்திய நிலையத்தின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு மிகவும் மெதுவான நிலையே காணப்படுகின்றது.
தம்புள்ளை, கலேவெல, நாவுல முதலான நகரங்களும் காலையில் மிகவும் வெறிச்சோடியிருந்தன.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதை தாம் அறியாத காரணத்தினாலேயே மரக்கறிகளை கொண்டு வந்ததாக பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் தெரிவித்தனர்.
ஆனால், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் கடைகளை திறந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.