‘ஹிஜாப் அணிய முடிவு செய்யும் இளம் பெண்கள் பெருமையுடன் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என ஆஸ்திரேலியாவின் முதல் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் செனட்டர் ஃபாத்திமா பேமன், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றினார்.
அதேநேரம், செனட் சபையில் ஹிஜாப் அணிந்து உரையாற்றிய முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையுடன், அகதியாக அவுஸ்திரேலியா வந்தடைந்த ஃபாத்திமா பேமேன் தனது மறைந்த தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவருடைய தியாகங்கள் ஒருபோதும் மறக்க முடியாதவை, அவருடைய சிறிய மகள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் என்பதைப் பார்க்க இங்கே அவர் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 27 வயதான செனட்டர் பேமன், தனது குடும்பத்தின் சக்திவாய்ந்த கதையை பாராளுமன்றில் கூறும் போது, சில நிமிடங்களுக்கு கண்ணீர் விட்டு அழுதார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இன்று எங்களுடன் இணைந்திருக்கும் என் அம்மா மற்றும் என் உடன்பிறந்தவர்களின் அசைக்க முடியாத ஆதரவு, அன்பு மற்றும் பொறுமைக்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்,
‘ஆப்கானிஸ்தானில் பிறந்த ஒரு இளம் பெண்ணும் அகதியின் மகளும் இன்று இந்த பாராளுமன்றில் நிற்பார்கள் என்று யார் நினைத்திருப்பார்கள்?
‘என் அப்பா ஒரு டாக்ஸி டிரைவராகவும், காவலாளியாகவும் செய்த தியாகங்களை அறிந்து, அவர் தனது வாழ்க்கையை நடத்துவதற்கும், அவரது குடும்பத்தை நடத்துவதற்கும், என் உடன்பிறந்தவர்களுக்கும் எனக்கும் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கும் போதுமான பணத்தை சேமித்து வைப்பதை உறுதி செய்தார்.
தந்தை அப்துல் வக்கீல் பேமன் 1999 இல் அகதியாக படகில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேற்ற காவலில் அடைக்கப்பட்டார்.
செனட்டர் பேமனின் தாத்தா பழைய ஆட்சியின் கீழ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததால், தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியபோது குடும்பம் ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றது.
மேலும், பல சிறுபான்மை எம்.பி.க்களுடன் சேர்ந்து தனது ஆச்சரியமான தேர்தல், ‘உண்மையான ஆஸ்திரேலியாவின்’ பாராளுமன்றத்தை அதிக பிரதிநிதித்துவப்படுத்தியது என்று செனட்டர் பேமன் கூறினார்.
‘பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹிஜாப் அணிந்த ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவதை இந்த நாடாளுமன்றம் ஏற்குமா?’ என்று தனது உரையில் கேட்டார்.
நான் என்ன அணிய வேண்டும் என்று எனக்கு ஆலோசனை கூறுபவர்கள் அல்லது எனது வெளிப்புற அனுபவத்தின் அடிப்படையில் எனது திறமையை மதிப்பிடுபவர்கள், ஹிஜாப் எனது விருப்பம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
‘ஹிஜாப் அணிய முடிவெடுக்கும் இளம்பெண்கள் அதை பெருமையுடன் செய்ய வேண்டும் என்றும், அதை அணிய உரிமை உள்ள அறிவுடன் அதைச் செய்ய வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன் எனவும் தனது அதிகாரப்பூர்வ கன்னி உரையில் தெரிவித்துள்ளார்.