அம்பலாங்கொட பலபிட்டிய பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பலத்த காயங்களுடன் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொட, மாதம்பகம பொனடுவ பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கொலை வழக்கு ஒன்றில் சந்தேகநபர் என்பதுடன், இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் சென்று விட்டு திரும்பும் போது இவ்வாறு உயிரிழந்துள்ளார்.