அண்மையில் இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டத்தில் இருந்து தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு ஐவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கத்திற்கு இதுவே சிறந்த வழி என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கேற்கும் முயற்சியில் இளைஞர்கள் தங்களது புதிய யோசனைகளுடன் பாராளுமன்றத்தில் பிரவேசிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
எனவே, அதிக வயதான அமைச்சர்களை பாராளுமன்ற ஆசனங்களில் இருந்து நீக்குமாறும் அல்லது அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில், அவர்களின் புதிய யோசனைகளுடன் மேற்படி நபர்களை நியமிக்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், எந்தெந்த பாராளுமன்ற ஆசனங்களை இளைஞர் சக்தியுடன் மாற்றுவது என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும்.
அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும், நாட்டில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து அரசியலமைப்பு பற்றிய புரிதல் வேண்டும்.
இந்த விகிதாசார வாக்களிப்பு முறையில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டாலும் இளைஞர்கள் ஒருபோதும் பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடியாது.
தற்போதைய விகிதாச்சார வாக்களிப்பு முறையின் கீழ், அதே பழைய போத்தலை கழுவிய பின் புதிய மதுவை நிரப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது.
பாராளுமன்றத்தில் உள்ள அதிக வயதான அமைச்சர்கள் நாட்டின் எதிர்கால பயணத்தில் நாட்டின் நன்மைக்காக பங்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.