அலரிமாளிகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அலரிமாளிகை ஊழியர்களே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அலரிமாளிகையில் இருந்து சில உபகரணங்களும் திருடப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் ஊடகப் பிரிவு முறையிட்டுள்ளது.
எவ்வாறாயினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் அலரிமாளிகையை ஆக்கிரமித்து வருவதால், அலரிமாளிகை வளாகத்தில் இருந்து என்னென்ன பொருட்கள் திருடப்பட்டன என்பதை அறிய முடியவில்லை என கொள்ளுப்பிட்டி பொலிஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அலரிமாளிகையில் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், பல சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.