அவசர நிவாரண வேலைத்திட்டத்தை அறிவித்தார் பதில் ஜனாதிபதி!

Date:

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் நிவாரண பட்ஜெட்டில் இருந்து கூடுதல் தொகையை இதற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவுபடுத்துமாறு பதில் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

மேலும், எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கு இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது வர்த்தகர்கள் தமது தொழிலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைதியான போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட திட்டம் நல்ல திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி விக்ரமசிங்க கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பதில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...