சனிக்கிழமை (09) கொழும்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏறியதால் காலி மற்றும் கண்டி ரயில் நிலையங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கிச் செல்லும் அனைத்து ரயில் பயணங்களையும் ரத்து செய்யுமாறு நிலைய அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலி மற்றும் கண்டி புகையிரத நிலையங்களில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த உத்தரவை மீறி புகையிரதங்களை இயக்குமாறு கோரினர்.
மேலும், கண்டியில் இருந்து கொழும்பு செல்லும் ரயில் கண்டியில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.