ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுகூடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அவசரகாலச் சட்டத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவது மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.