ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இதுவரை பயண இலக்கை அடையாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், குறித்த இராஜினாமா கடிதம் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்லத் திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சென்ற பிறகு அவர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சமர்பிப்பார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.