எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது.
லிட்ரோ நிறுவனம் அதன் எரிவாயு உள்ளடக்கம் சுமார் 3,700 மெட்ரிக் தொன்கள் என்று கூறியது.
கப்பல் இலங்கைக் கடற்கரையை வந்தடைந்ததன் பின்னர் தரச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிக்கைகளில் சிக்கல்கள் இல்லாவிட்டால் எரிவாயுக் களஞ்சியத்தை இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இலங்கை வந்திறங்கிய கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட எரிவாயுவின் மற்றுமொரு பகுதி இன்று நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன்படி, 80,000 முதல் 90,000 வரையான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் வெளி மாகாணங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.