ஏற்கனவே கூறியது போன்று இலங்கை ஜனாதிபதி பதவியை காலி செய்யும் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (13) கையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி பதவி விலகுவார். அவரது இராஜினாமா கடிதத்தையும் இன்றைய தினமே எனக்கு வழங்குவார், மக்கள் எந்தவித சந்தேகமும் கொள்ளாது அமைதியாக இருக்க வேண்டும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.