ஜப்பான் தூதரகம் இலங்கைக்கு உதவவில்லை என்ற செய்தியை மறுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இலங்கைக்கு நிதியுதவி வழங்கினால் முறைகேடாக நிர்வகித்துவிடலாம் என அஞ்சும் ஜப்பான் இலங்கைக்கு உதவாது’ என பிரபல தனியார் செய்தி நாளிதழ் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது ஜப்பான் தூதுவர் இதனைத் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தச் செய்திக் கட்டுரையில் எந்த ஆதாரமும் இல்லை, எங்கள் தூதுவர் ஒருபோதும் அப்படிச் சொல்லமாட்டார்’ என்று ஜப்பானிய தூதரகம் ஊடக நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஜப்பான் துதுவர் ஹிடேக்கி மிசுகோஷி இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்ம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.