உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் 15 வெளியிடப்படும்!

Date:

2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை இந்த வருடம் நவம்பரில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நடைமுறை பிரச்சினைகள் காரணமாக எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை ஒரு மாத காலத்திற்கு பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராகும் காலத்தை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...