பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களம் வருத்தம் தெரிவிப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்
அந்த குழுவினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றைப் பதிவு செய்யச் சென்ற நான்கு சிரச ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டதோடு, பெண் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட நால்வர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியதாக தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.