நேற்றிரவு (08) அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (09) காலை 8.00 மணிக்கு தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை நிறைவடைந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சேபால லியனகே தெரிவித்தார்.
தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு தேவையான எரிபொருள் கிடைக்காததால் வேலை நிறுத்தம் தொடங்கியது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததாகவும் சேபால லியனகே கூறுகிறார்.