ஊழலை எவ்வாறு தடுப்பது குறித்து போராட்டக்காரர்களுக்கு தெரிவிப்போம்: பதில் ஜனாதிபதி

Date:

அமைதிப் போராட்டத் தலைவர்களால் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மக்கள் பேரவை’ மிகச் சிறந்த திட்டமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

மோசடி மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும், எதிர்காலத்தில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்கம் அறிவிக்கும் எனவும் பதில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிளர்ச்சியாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர்களின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆரம்பம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் பதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான போராட்டக்காரர்களுக்கு வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என தான் நம்புவதாகவும் பதில் ஜனாதிபதி தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...