எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உடல் நலக்குறைவால் (வைரஸ் காய்ச்சல் என சந்தேகிக்கப்படுகிறது) இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஜேபியை வழிநடத்தவிருந்த பிரேமதாச காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.