எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் திட்டம்!

Date:

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் பொது மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் வேலைத்திட்டமொன்று  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மற்றும்  பிரதேச ரீதியாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் இளைஞர் சமூகத்தினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு அறிவூட்டப்படவுள்ளனர்.

இங்கு QR குறியீடு ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தங்களிடம் வைத்திருக்க அல்லது அவர்களுக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாகனத்தில் காட்சிப்படுத்த QR குறியீட்டின் அச்சிடப்பட்ட நகல்கள் வழங்கப்படும்.

இந்தச் சேவையை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்து கறுப்புப் பண விலைக்கு எரிபொருளை விற்பனை செய்பவர்கள் தோன்றியதன் காரணமாக எரிபொருள் இருப்புக்களை நியாயமாக விநியோகிப்பதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...