இலவச அம்பியூலன்ஸ் சேவையான “1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையானது, நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அதேநேரம், குறிப்பிட்ட 13-20 நிமிடங்களுக்குள் இந்த சேவை அவசரநிலைகளை பூர்த்தி செய்ய முடியாது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் அதனை நிவர்த்தி செய்வது தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது எனவும் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
“1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ்கள் வாகன விபத்துக்கள், அவசர சிகிச்சை மற்றும் பெரிய சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது