பெற்றோல் நிலையங்களில் இருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை திருப்பித் தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாதுன்ன இன்று (31) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றிய இராணுவ அதிகாரிகள் மீள அனுப்பப்பட்டால், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.