எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகன இலக்கத் தகடுகளை மாற்றினால் அபராதம்!

Date:

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வாகன இலக்கத் தகடுகளை மாற்றுவது குறித்து தெரிய வந்தால், குறித்த நபருக்கு 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றத்திற்காக வாகனத்தின் உரிமையாளரை கைது செய்ய முடியும். பின்னர் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதன் மூலம் இந்த தண்டனையை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1984 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க மோட்டார் வாகனச் சட்டம், 2009 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க மோட்டார் வாகன வாகன சட்ட திருத்தத்திற்கு அமைவாக முதல் தடவையாக இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 15,000 ரூபாய்க்கு குறையாத மற்றும் 20,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

மேலும், இதே குற்றச்சாட்டை இரண்டாவது முறை அல்லது அதற்கு மேல் மேற்கொள்ளும் நபருக்கு 30,000 ரூபாய்க்கு குறையாத ஆனால் 50,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

வாகன இலக்கத் தகடுகளுக்கு அமைய எரிபொருள் விநியோகிக்கப்படும் முறை நேற்று முன்தினம் (21) ஆரம்பமானது. அந்த சந்தர்ப்பத்தில் சிலர் வாகன இலக்கத் தகடுகளை மாற்றி எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகை தந்தமை குறித்து சமூக ஊடகங்களில் காணக் கூடியதாக இருந்தது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...