எரிபொருள் விலை குறையக் கூடும், விலையில் மாற்றங்களை அறிவிக்க அமைச்சு தீர்மானம்: காஞ்சன விஜேசேகர!

Date:

உலக சந்தை விலைகளின்படி எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், அடுத்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் மூலம் எரிபொருள் விலை குறையக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதி இரவு எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் எரிபொருள் விலை குறைப்பு தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வினவிய போது, ​​எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி, விநியோகஸ்தர்களுக்கு கமிஷன் இல்லாமல் எரிபொருள் விலையை கணக்கிடும்போது, ​​எரிபொருள் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகளை அது காட்டியது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் மூலம் விலை குறைப்பு குறிப்பாக டீசல் மற்றும் பெட்ரோலுக்கானது என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...