எரிவாயு கப்பல் நாட்டிற்கு வந்தடைந்தன: உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Date:

எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3,740 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டாவது கப்பல் நாளை (ஜூலை 11) மாலை இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் இன்று பிற்பகல் 3 மணிக்கு கெரவலப்பிட்டியை வந்தடைந்தவுடன் எரிவாயுவை இறக்கி விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் 3,200 மெற்றிக் தொன் எரிவாயுவுடன் மூன்றாவது கப்பல் ஜூலை 15 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதுடன், இம்மாதத்திற்கான ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயுவின் அளவு 33,000 மெட்ரிக் தொன் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 12ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் வழமையாகவும் முறையாகவும் இடம்பெறும் எனவும், இம்மாத இறுதிக்குள் உள்நாட்டு எரிவாயு தேவை தொடர்பான பிரச்சினை முற்றாக தவிர்க்கப்படும் எனவும்  லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...

வரலாற்றைத் தேடும் வாசகர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில்..!

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் லிபியாவை சேர்ந்த கலாநிதி அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி...

40 வருட முன்பள்ளி சேவையின்பின் பெளசுல் ரூசி சனூன் ஆசிரியை ஓய்வு பெற்றார்.

-புத்தளம் எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரின் சிரேஷ்ட முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.பௌசுல் ரூஸி சனூன்...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்...