அரசியல் கட்சிகளின் மூத்தவர்கள் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்பதால் சர்வகட்சி அரசாங்கம் வெற்றியடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஒற்றுமையுடன் செயல்படக்கூடிய ஒரு குழு ஆட்சியைக் கைப்பற்றினால் நல்லது. மக்கள் ஒரு அரசாங்கத்தை நிராகரித்தால், எதிர்க்கட்சியில் உள்ள மாற்றுக் குழு ஆட்சி அமைக்க வேண்டும். எனவே அவ்வாறான குழுவொன்று பொறுப்பேற்க தைரியமாக இருக்க வேண்டும் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காலை முதல் மாலை வரை பேச்சு வார்த்தை நடக்கிறது. அதிகார வெறி கொண்டவர்கள் ஜூலை 9-ம் திகதி போராட்டத்தில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும்.
மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படி நடந்தால் பலர் கைகலப்பில் கொல்லப்படுவார்கள், என்று அவர் கூறினார்.
இதேவேளை அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் அணிவகுத்து நின்றால், எதிர்க்கட்சிகள் நிச்சயம் வெற்றி பெறும்.
ஆணை கிடைக்க வேண்டும் என்றும், ஆணை கிடைத்தால் பெரும்பான்மை, சிறுபான்மை என்று பேசாமல் எதிர்க்கட்சி பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.