கடவுச்சீட்டு பெற வரிசையில் நிற்கும் போது கர்ப்பிணி பெண்ணொருவருக்கு பிரசவ வலி!

Date:

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 26 வயதுடைய  கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவ அறிகுறிகள் தோன்றியது.

இதனையடுத்து இராணுவம் தலையிட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ஹட்டன் பிரதேசத்தில் இருந்து கொழும்பு வந்த இளம் தம்பதியொன்று வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சுமார் இரண்டு நாட்களாக குடிவரவு வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெண் கர்ப்பமாக இருந்ததாகவும், இன்று காலை 7.40 மணியளவில் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கழிவறைக்கு சென்று மலசல கூடத்தை பயன்படுத்திய போது, ​​அவருக்கு திடீரென பிரசவ அறிகுறிகள் இருப்பதாக அருகில் உள்ள பெண்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, அந்த இடத்தில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் பெண் உத்தியோகத்தர்கள் உடனடியாக தலையிட்டு கர்ப்பிணிப் பெண்ணை இராணுவ வாகனத்தில் பொரளை காசல் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்ததாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவர் வழியில் ஒரு பெண் குழந்தையைப் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

தாயும் குழந்தையும் மகளும் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...