கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருள் விநியோகம்!

Date:

பெற்றோலிய சேமிப்பு முனையம், புகையிரதங்கள் மற்றும் ட்ரக்டர்கள் மூலம் இன்று (19) முதல் கிராமிய டிப்போக்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (18) வரை இலங்கைக்கு வந்த 02 டீசல் கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள மற்றுமொரு டீசல் கப்பலில் இருந்து டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும் நேற்று, நாட்டிற்கு வந்த பெற்றோல் கப்பல் ஒன்றின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை இறக்கும் பணிகளும் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக எரிபொருள் விநியோகம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே, சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் அனைத்து வாகனங்களையும் அகற்றுமாறு அமைச்சகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...

நிலவும் வரண்ட வானிலை நாளை முதல் மாற்றமடையும்

நாட்டில் தற்போது நிலவும் வரண்ட வானிலை நாளை (23) வெள்ளிக்கிழமையிலிருந்து மாற்றமடையும் என...