பொதுநலவாய விளையாட்டில் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை தாம் இழந்துவிட்டதாகவும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பணிப்பாளர் நாயகம் தனது பெயரை இல்லாமலாக்கினார்கள் என பாத்திமா சலிஹா பெதும் இஸ்ஸடீன் கூறினார்.
அவர் இந்த விடயத்தை தனது டுவிட்டரில் தளத்தில் தெரிவித்தார்.
பாத்திமா சலிஹா குழு நிலைப் போட்டியான ஸ்குவாஷ் (SQUASH) ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இலங்கை அணி வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டதுடன், பெண்கள் அணியில் பாத்திமா சலிஹா பெதும் இஸ்ஸடீன், சமீரா ருக்ஷானா டீன் ஆகிய இரண்டு முஸ்லிம் வீராங்கனைகள் இடம்பிடித்தருந்தனர்
அவர் 2019 ஆம் ஆண்டிற்கான தேசியப் போட்டிகளையும் வென்றுள்ளதுடன் இலங்கையின் மகளிர் ஸ்குவாஷ் தேசிய சாம்பியனாக முடிசூட்டப்பட்டார்.
இந்நிலையில், பொதுநலவாய விளையாட்டு 2022 இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை தாம் இழந்துவிட்டதாக அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.
அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பணிப்பாளர் நாயகம் தனது பெயரை துண்டித்ததாக அவர் கூறினார்.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் தான் தலையிடவில்லை என்றும், அனைத்து தேர்வுகளும் தேசிய தேர்வுக் குழுவால் மேற்கொள்ளப்பட்டதாகவும், தேசிய விளையாட்டு கவுன்சிலால் இறுதி செய்யப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் கூறினார்.
2/2
After being the National Champion for 3 years straight till to date, the minister incharge of sports was Narmal Rajapaksha, him, the DG and the Sri Lanka Squash Federation without my permission unfairly cut my name out of the commonwealth games 2022.— Fathoum Zaleeha Issadeen (@FathoumZaleeha) July 24, 2022