சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வர மீனவர்கள் 6 பேர் கைது!

Date:

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று (20) மீன்பிடிக்க வந்த ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு வந்தனர்.

மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை தலைமன்னாருக்கும்- நாச்சிகுடாவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் 6 மீனவர்களும் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் ஊடாக இலங்கை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...